/ மாணவருக்காக / அன்றாட வாழ்வில் கணிதம் (பாகம் – 2)
அன்றாட வாழ்வில் கணிதம் (பாகம் – 2)
கணிதவியல் கோட்பாடு அன்றாட வாழ்வில் அங்கமாக இருந்து வருவதை எடுத்துரைக்கும் நுால். நம்மை அறியாமலே முக்கிய பங்காற்றுவதை விவரிக்கிறது. அதிக அளவில் அன்றாடம் பயன்படுத்தும் வார்த்தைகள் கணித விதிக்கு உட்பட்டே அமைவதை சுட்டிக்காட்டுகிறது. நகரங்களில் ஏற்படும் நெரிசலையும், பயண நேரத்தையும் குறைக்க கணித ரீதியாக முடிவெடுக்கலாம் என்கிறது. நதிகளின் பாதை கணித விதிப்படியே அமைவதை சுட்டிக்காட்டுகிறது. வெப்பநிலை, கடிகாரங்களின் பண்புகள், அன்றாடம் பயன்படுத்தும் காலணி, ஓ.டி.பி., எண் அனைத்துமே எப்படி கணித விதிப்படி அமைகின்றன என்பதை ஆதாரப்பூர்வமாக விளக்கப்பட்டுள்ளது. கணித கேள்விகளுக்கு விடை தரும் புத்தகம். – இளங்கோவன்




