/ ஆன்மிகம் / அன்றாட வாழ்விற்கு ராமாயணம் காட்டும் வெற்றிப் பாதை
அன்றாட வாழ்விற்கு ராமாயணம் காட்டும் வெற்றிப் பாதை
ராமாயணம் இன்றைய வாழ்வில் எப்படி நல்வழி காட்டுகிறது என தெளிவுபடுத்தும் நுால். காவியத்தில் ராமர், ஹனுமார் கஷ்டப்பட்டது போல் தோன்றும். ஆனால், அது பாடம் போல் இருக்கவே அவ்வாறு புனையப்பட்டுள்ளதாக அழகுற எடுத்துரைக்கிறது. பண்டிதருக்கு உரிய விளக்கம் சிறப்புடன் தரப்பட்டு உள்ளது. வாழ்வில் ஆத்ம ஞானமும், பொறுமையுமே வெற்றிக்கு அஸ்திவாரமாய் விளங்கும் என மிகவும் தெளிவாக முன் வைக்கிறது. மன உளைச்சலில் இருந்து மீள்வதற்கு, ராமாயணக்கதை நிகழ்வுகளை மேற்கோள் காட்டி சொல்லும் பாங்கு புத்துணர்வு ஏற்படுத்துகிறது. உயர்வுக்கு பயமும், பதற்றமுமே பரம எதிரி என விளக்கி புரிய வைக்கும் நுால். – டாக்டர் கார்முகிலோன்




