/ கதைகள் / அங்காயா வம்சம்

₹ 350

வாழ்வில் அன்பு நிறைந்த பக்கங்களை தேடத் துாண்டும் நாவல். அங்கம்மா என்ற பெண் கதாபாத்திரம் வழியாக கதை நகர்கிறது. கணவருக்கு கூலி கிடைத்தால்தான் அடுப்பில் உலை வைக்க முடியும் என்ற நிலையில், கணவரின் மரணம் அங்கம்மா வாழ்வில் உலை வைத்தது. தனி ஒருத்தியாக, உறவினர், சமூகத்தை எதிர்கொண்டு போராடி குழந்தைகளை வளர்த்ததை உணர்வு கலந்து சொல்கிறது. மகளின் திருமணத்தை நடத்துவதற்கான வலி நிறைந்த போராட்டத்தை உணர்த்துகிறது. தனக்குள் மறைந்திருக்கும் சக்தியை, ஆளுமையாக செயல்படுத்துவது பற்றி கூறுகிறது. இயற்கையை சாதகமாகப் பயன்படுத்தி சமூகத்தில் ஏற்படுத்திய தாக்கத்தை அலசுகிறது. குடும்ப வாழ்க்கை ஒவ்வொருவருக்கும் வேறானது என புரிய வைக்கிறது. வாசிப்போரையும் கதாபாத்திரமாக எண்ண வைக்கும் நுால்.– டி.எஸ்.ராயன்


வாசகர்கள் கருத்துகள் (2)

R Ramalakshmi
ஜூலை 11, 2025 06:22 PM

Good.


R Ramalakshmi
ஜூலை 11, 2025 06:23 PM

Good


சமீபத்திய செய்தி