/ கதைகள் / அன்னை நல்லதங்காள்

₹ 200

நாட்டுப்புற பாடல், தெருக்கூத்துகளில் இடம் பெற்ற நல்லதங்காள் கதையின் வரலாற்றை விவரிக்கும் நுால். மதுராபுரி ஜமீனை சேர்ந்த தங்கை நல்லதங்காளை, அரசன் காசிராஜனுக்கு மணம் செய்து கொடுத்தான் அண்ணன் நல்லதம்பி. அவன் மனைவி மூலியலங்காரி சூழ்ச்சி செய்து தங்கையுடன் தொடர்பை துண்டித்தாள். ஏழு குழந்தைகளை பெற்றாள் நல்லதங்காள். அவள் வாழ்ந்த பகுதியான மானாமதுரை பஞ்சத்தின் கோரப்பிடியில் சிக்கியது. மக்கள் பிழைப்பு தேடி வெளியூர் சென்றது என விவரிக்கப்பட்டுள்ளது. குழந்தைகளை காப்பாற்ற வழியின்றி கிணற்றில் வீசி கருணை கொலை செய்து, தற்கொலை செய்து கொள்கிறாள். இவ்வாறு கதை அமைந்த வரலாற்று செய்திகள் இடம் பெற்றுள்ளன. நல்லதங்காள் கதை பற்றிய ஆய்வு நுால். – புலவர் சு.மதியழகன்


சமீபத்திய செய்தி