/ கவிதைகள் / அரிதாரப் பூச்சாண்டிகள்

₹ 175

சமுதாய அவலங்களை தோலுரித்துக் காட்டும் உணர்ச்சி மிக்க கவிதைகளின் தொகுப்பு நுால். சமூகத்தை சீர்திருத்த வேண்டும் என்ற வேட்கையை வெளிப்படுத்துகிறது. இதில் புதிய மாதிரியில் பாடல்கள் புனையப்பட்டுள்ளன. பாடல்களில் இன்னொரு வகை உள்ளதை காட்டுகிறது. கோவலன், கருணை மனதால் மாதவியை பெற வில்லை என ஆத்திரம் கொப்பளிக்க எடுத்துரைக்கிறது. சுதந்திரம் யாசித்த சோகம், பால் சுரக்கும் மலடுகள், மூலிகை தேடும் மூலநோய், கிழிந்து போன கற்பனை போன்ற தலைப்புகளே நோக்கத்தை பறை சாற்றுகின்றன. ‘குடி கெடுக்கிற குடியை குடித்தே ஒழிப்போம்’ என்கிறது. ‘இன்னொரு சபதம் ஏற்போம் எல்லாம் இலவசம் என்போம்’ என பொங்குகிறது. ஆத்திரப் பாடல்களின் தொகுப்பு நுால். – சீத்தலைச்சாத்தன்