/ புத்தக மதிப்புரை / அறிவின் அருட்குரு

₹ 100

குருவின் சிறப்பு, அவரை மதிக்க வேண்டிய அவசியம் குறித்து எடுத்துக் கூறும் நுால். கல்வி, ஒவ்வொருவரின் வாழ்வையும் செதுக்கும் அற்புதக் கலை. இதை கற்பிக்கும் ஆசிரியரின் முக்கியத்துவம், மாணவர்கள் மனதில் பதியும் வகையில் தகவல்களை கொண்டுள்ளது. நல்லறம் புகட்டி வழிகாட்டும் ஒளியாக திகழ்கிறது. நற்குணங்களை வளர்த்துக்கொள்ள உதவும் வகையில் உள்ளது. ஆசிரியர் – மாணவர் உறவு எப்படி எல்லாம் பேணப்பட வேண்டும் என உரைக்கிறது. அதே நேரம் பெற்றோர் செயல்பாடு எந்த வகையில் அமைய வேண்டும் என்ற தகவல்களும் அறிவுரை போல கூறப்பட்டுள்ளன. ஆசிரியர் – மாணவர் உறவு இருவழிப்பாதையாக இருக்க வேண்டும் என சுட்டிக்காட்டுகிறது. பள்ளிகளில் உறவு மேம்படும் வகையில் அமைந்த கட்டுரைகளின் தொகுப்பு நுால். – ராம்


முக்கிய வீடியோ