/ வரலாறு / அறிய வேண்டிய அரிய தமிழ்ப் புலவர்கள் (16 – 19 ஆம் நுாற்றாண்டு) தொகுப்பு

₹ 180

அருந்தமிழ்ப் புலவர்களின் பெருந்தமிழ் வரலாற்றுப் பேழை நுால். வண்ணச் சரபம் தண்டபாணி சுவாமிகள் எழுதிய புலவர்கள் புராணத்தில், 72 பேர் வரலாறு மட்டுமே பாடப்பட்டிருந்தது. அரிதின் முயன்று, 230 புலவர்கள், அவர்கள் எழுதிய நுால் விபரங்கள், வாழ்வில் நிகழ்ந்த அற்புதங்கள் என தேடித் தொகுத்து வெளியிடப்பட்டுள்ளது. மதம் கடந்து தமிழுக்கு உழைத்தவர்களை, மனம் திறந்து, ஒரே வரிசையில் கொண்டு வந்திருப்பது மகத்தானது. அதிவீரராம பாண்டியர் முதல், கனகசபை புலவர் வரை வாழ்வும், படைப்பும் வியக்க வைக்கின்றன. வடமொழி புலவர் அப்பைய தீட்சிதர், யாழ்ப்பாணம் அரசகேசரி, ஆறுமுக நாவலர், 60 வயதில் பாடத் துவங்கிய அருணாசலக் கவிராயர், பெண் கவிஞர் அம்மச்சி, இசை புலவர் ஆப்ரகாம் பண்டிதர், தில்லைவிடங்கன் மாரிமுத்துப்பிள்ளை, மஹாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை பற்றி எல்லாம் உள்ளது. அறிவானந்தம் பெருகும் வகையில் அமைந்து உள்ள நுால். – முனைவர் மா.கி.ரமணன்


முக்கிய வீடியோ