/ வரலாறு / அறியப்படாத தமிழகம்
அறியப்படாத தமிழகம்
அறிந்த தமிழகத்தின் அறியாத செய்திகளை தரும் நுால். தமிழர் பண்பாட்டின் உருவாக்கம் பற்றிய புரிதலை ஏற்படுத்துகிறது. சமண, பவுத்த மதங்கள் தமிழ் பண்பாட்டிற்கு ஆற்றிய பங்கை அழுத்தமாக எடுத்துரைக்கிறது. உப்பு, எண்ணெய், தேங்காய், வழிபாடு, விழாக்கள் பற்றி கூறுகிறது. உடை, உறவு முறை, உறவு பெண்கள் வரலாறை கோடிட்டு காட்டுகிறது. ஒரு பொருட்டாக கருதப்படாத செய்திகளில் வரலாறும், பண்பாடும் படிந்துள்ளதை வெளிச்சமிடுகிறது. மண்ணும், பயிர் வகைகளும், மனிதர்களும், அசையும் உயிரினங்களும் பன்முகத்தன்மை கொண்டவை என்ற புரிதலை ஏற்படுத்துகிறது. கருத்துகளை தக்க சான்றுகள் வழியாக மேற்கோள்களுடன் முன்வைக்கிறது. சிந்திப்பதற்குரிய களங்களை காட்டும் நுால். – ஊஞ்சல் பிரபு