/ விளையாட்டு / அர்ஜுனா மற்றும் கேல் ரத்னா விருது பெற்ற வீரர்கள்
அர்ஜுனா மற்றும் கேல் ரத்னா விருது பெற்ற வீரர்கள்
விளையாட்டுத் துறையில் இந்திய முன்னேற்றத்தை வெளிப்படுத்தும் நுால். உயர்ந்த விருதுகள் பெற்ற வீரர்களை நம்பிக்கை ஊட்டும் வண்ணம் அறிமுகம் செய்கிறது. விளையாட்டுத் துறையில் நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கும் வீரர் – வீராங்கனையர் பற்றி முதல் கட்டுரை தெரிவிக்கிறது. கோல்ப், கூடைப்பந்தாட்டம், துப்பாக்கி சுடுதல், கிரிக்கெட் போன்ற விளையாட்டுகளில் சாதிப்பவர்கள் குறித்த விபரங்களுடன் உள்ளது.வீரர்களை ஊக்குவித்து உதவும் தொழிலதிபர்கள் குறித்த தகவல்கள் தரப்பட்டுள்ளன. சாதனைப் பட்டியல் துல்லியமாக இணைக்கப்பட்டுள்ளது. இந்திய விளையாட்டின் வளர்ச்சி வரலாற்றை அறிய உதவும் நுால்.– ராம்