/ ஆன்மிகம் / அருள் தரும் ஆலய தரிசனம்

₹ 400

வட அமெரிக்க தமிழ் மாத இதழான ‘தென்றல்’ என்ற இணையதளத்தில் வெளியான நமது கோவில்கள் பற்றிய நுால். அந்த இதழில் ‘சமயம்’ என்ற தலைப்பில் வெளியான இவை, தமிழக கலாசாரத்தை அமெரிக்கவாழ் தமிழருக்கு காட்டுவதாக உள்ளது.அதனால், எளிமையான தமிழில் அதிக புராணத் தகவல் இன்றி, அதே சமயம் திருக்கோவில்களின் சிறப்புகளையும் உள்ளடக்கியிருக்கிறது.அதைத் தமிழ் வடிவமாக்கி வெளியிட்ட ஆசிரியர், அறுபடை வீட்டில் இருந்து துவங்கி, தேவியர் கோவில்கள், சிவத்தலங்கள் என்ற பல்வேறு தலைப்பில் இவற்றை தொகுத்தது சிறப்பு.சிதம்பரம் பெருமானின் ஆனந்த தாண்டவம், சிருங்கேரி சாரதா அன்னையைப் பார்த்தாலே மனம் அமைதியாகும். லால்குடி சப்தரிஷி ஆலயம் என்றாலும், மாலிக்காபூர் இந்த ஊருக்கு, ‘லால்குடி’ என்று அழைப்பதற்கு, ‘சிவப்புக் கோபுரம்’ என்பதை சுட்டிக்காட்டிய விஷயம் என்ற பல சிறப்புகள் இந்த நுாலில் உண்டு. இறையருள் பெற விரும்புவோர் வாங்கிப்படிக்கலாம் என்ற ஆசிரியர் கருத்து நினைவுகூரத்தக்கது.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை