/ கதைகள் / அரும்பு சிரித்தது...

₹ 100

நினைவலையில் இருந்து எழுதிய சிறுகதைகளின் தொகுப்பு நுால். வாழ்க்கை அனுபவங்களும் உள்ளன. ஜோடி பொருத்தமில்லை என்ற பேச்சை புறந்தள்ளி, திட்டமிட்டு வாழும் தம்பதியரை மையமாக்கி, ‘காத்திருந்த கன்னி’ கதை படைக்கப்பட்டுள்ளது. அலுவலக பெண் ஊழியரை வலையில் சிக்க வைக்க எண்ணியவர், மனைவியால் மனம் திருந்தியதை, ‘நெஞ்சமே நீ வாழ்க’ கதை தக்க அறிவுரையுடன் பகிர்கிறது. திருமணமாகாதவள் என எண்ணி பெண்ணிடம் பழகி, திருமணமானது தெரிந்ததும் கழற்றிவிடும் வஞ்சக எண்ணத்தை, ‘காதல் ரோஜா’ கதை கூறுகிறது. மேலும் நினைவில் என்ற தலைப்பில், ஆசிரியரின் திருமணம், அவருக்கு வந்த கடிதங்கள், தமிழக முதல்வர் மற்றும் எழுத்தாளர்களுடன் வைத்திருந்த இலக்கிய தொடர்பு குறித்தும் விவரிக்கும் நுால். – டி.எஸ்.ராயன்


புதிய வீடியோ