/ கட்டுரைகள் / அரும்பெரும் அறிஞர்களும் அறிவூட்டும் சம்பவங்களும்!

₹ 80

அறிஞர்கள் வாழ்வில் நடந்த முக்கிய அறிவூட்டும் சம்பவங்களின் தொகுப்பாக அமைந்துள்ள நுால். மொத்தம், 50 அரிய நிகழ்வுகள் சுவாரசியமாக எழுதப்பட்டு உள்ளன. அமெரிக்காவைச் சேர்ந்தவர் அறிஞர் வால்டர் ஹண்ட். அன்றாடம் பயன்படுத்தும் ஊக்கு என்ற ‘சேப்டிபின்’ கண்டுபிடித்தவர் இவர் தான். இந்த கண்டுபிடிப்பை நிகழ்த்துவதற்கான உந்துதல் ஏற்பட்டது குறித்து சுவாரசியமாக விளக்கப்பட்டுள்ளது. அறிஞர்கள் பற்றியும், அவர் வாழ்வில் நடந்த சுவாரசிய சம்பவங்களும் கூறப்பட்டுள்ளன. அத்துடன் அந்த அறிஞர் படமும், பெட்டி செய்தியாக ஒரு பொன்மொழியும் சேர்க்கப்பட்டு உள்ளது. வித்தியாசமான நிகழ்வுகளால் வாழ்வில் நம்பிக்கை ஊட்டும் நுால்.– ஒளி


சமீபத்திய செய்தி