/ கதைகள் / அவிபலி

₹ 235

சோழர் ஆட்சி காலத்தில் தன்னைத்தானே பலியிட்ட படைவீரனின் இறுதி சடங்கையும், நிகழ்கால நவீன கதையையும் பிணைத்து படைக்கப்பட்டுள்ள நாவல். கதைமாந்தர் அர்ஜுன் குடும்ப நிகழ்வுகளும், குறுநில மன்னன் மலையமான் காலச்செய்திகளும் பின்னி செல்கின்றன. முற்கால பண்பாட்டை போற்றி காப்பதில், இக்காலத்தில் மக்கள் கொண்டிருக்கும் முனைப்பை வெளிப்படுத்துகிறது. நடுகல் வழிபாடு தொடர்பான செய்திகளை அறிய செய்கிறது. கொற்றவை – அரிக்கண்ட வீரன் சடங்கு, பிற்காலத்தில் திரவுபதி – -அரவான் வழிபாடாக மாறியதாக குறிப்பிடுகிறது. மகாபாரத கூத்து, சோழர் கால சாக்கை கூத்துக்கு இடையில் ஒப்பீடுகளை முன்வைக்கிறது. வரலாறு மற்றும் சமூக நாவலை ஒரே நேரத்தில் படித்த உணர்வை ஏற்படுத்தும் நுால். – கவிஞர் மெய்ஞானி பிரபாகரபாபு


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை