/ கதைகள் / அவுரி
அவுரி
தமிழர் சமூக வாழ்வை படம் பிடிக்கும் 11 சிறுகதைகளின் தொகுப்பு நுால். ஒரே அலுவலகத்தில் பணி புரியும் நண்பர்களின் குடும்ப திருமண உறவு போராட்டத்தை, ‘வாசுவும், சந்தானமும் நண்பர்கள்’ என்ற கதை விவரிக்கிறது. குழந்தை பருவத்தில் மகனுக்கு ஏற்பட்ட பாதிப்பை போக்க, முருகன் கோவிலில் நேர்ச்சை செய்கிறார் தாய். மகன் பெரிய வனாகி அந்த வேண்டுதலை நிறைவேற்றினாரா என்பதை, ‘மன்னாருக்கு சாமி வந்துடுச்சி’ கதை பரபரப்புடன் சொல்கிறது. மனித உணர்வின் மென்மையில் இருந்து படைக்கப்பட்ட சிறு கதைகளின் தொகுப்பு நுால். – டி.எஸ்.ராயன்




