/ கவிதைகள் / ஆயிரம் திணைகளும் ஒரு புறாவும்

₹ 120

மென்மை சிந்தனைகளாக அமைந்த கவிதைகளின் தொகுப்பு நுால். சமூகத்தை கூர்ந்து நோக்கி படைக்கப்பட்டுள்ளது. நுட்பமாக சமூக செயல்களை ஆராய்ந்து பளிச்சிடும் சொற்களால், ‘மயான அமைதியை கலைக்கிறது சமாதியில் விழுகிற பூ’ என கருத்தை வெளிப்படுத்துகிறது. மவுனமும், அமைதியும் வேறானவை என தெளிவாக எடுத்து கூறுகிறது. சுற்றுச்சூழல் பாதிப்படைந்து வருவதை, ‘நெகிழிப் பையினை இறுகப் பிடிக்கிறது இலையற்ற மரம்’ என்ற வரிகளில் வெளிப்படுத்துகிறது. பல கவிதைகள், ‘சிதறியிருக்கும் ஆயிரம் திணைகளுக்கும் ஒரே புறா நிலா’ என்பது போல் காட்சியாக அமைந்து ஓவியம் போல் மனதில் பதிகிறது. சமூகப் பார்வையுடன் மெல்லிய உணர்வை வெளிப்படுத்தும் கவிதை நுால். – ஒளி


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை