/ புத்தக மதிப்புரை / அயோத்தி தாசர்

₹ 200

அயோத்தி தாசர் வாழ்க்கை வரலாற்று நுால். சென்னையில் 1845ல் பிறந்த அயோத்தி தாசர், முறையான கல்வியறிவு பெற்றுத் திகழ்ந்த விபரங்களை குறிப்பிடுகிறது. விதவை மறுமணம், தாழ்த்தப்பட்ட மக்கள் முன்னேற்றம் போன்றவற்றில் ஆர்வமாக செயல்பட்டதை விரிவாக தருகிறது. புத்த மதக் கோட்பாட்டை ஏற்று அதையே வாழ்வியல் நெறியாக ஏற்றிருந்ததை குறிப்பிடுகிறது. பழங்கால மருத்துவ முறைகளை ஆராய்ந்து தெளிந்தது பற்றி விளக்கமான செய்திகள் உள்ளன. ஓலைச் சுவடிகளை படித்து பொருள் கொள்ளும் ஆற்றல் கொண்டிருந்தவர் பத்திரிகை நடத்தியதையும் தருகிறது. எது நீதி, எது தேச ஒற்றுமை, எது பூஜை என்ற கேள்விகளுக்கு தெளிந்த விளக்கம் தருகிறது. சிறிய சிறிய தலைப்புகளில் தகவல்களை தெளிவாக எடுத்துரைக்கும் நுால். – முகிலை ராசபாண்டியன்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை