/ கதைகள் / ஆழ்கடலில் ஆயிரத்தில் ஒருவன்

₹ 200

கடல் பயணத்தில் ஆர்வம் கொண்டவனின் வாழ்வை மையமாக உடைய நாவல் நுால். குத்து சண்டையில் உலக சாம்பியனான சவுராவுக்கு பெண் ரசிகைகள் ஏராளம். காதலித்த சமுத்ராவை திருமணம் செய்கிறான். தொடர்ந்து கடற்கொள்ளையரை ஒடுக்கி ஆழ்கடலில் ஆதிக்கத்தை நிலைநாட்டுகிறான். இவன் குடும்பத்தில் ஏற்படும் பிரச்னைகளையும், கடல் பயண சாகசங்களையும் கதையாக கண்முன் காட்டுகிறது. ஆடம்பர விருந்து, நடனம், ஆண் – பெண் உறவு என மேற்கத்திய பண்பாடு அடிப்படையை கூறுகிறது. கப்பல் பயணம் புதுமையுடன் அமைக்கப்பட்டுள்ளது. ஆங்கிலத் திரைப்படம் பார்ப்பது போல் காட்சிகள் துள்ளலுடன் நகர்கின்றன. இலங்கை தமிழர் பேச்சு நடையில் அமைந்துள்ளது. புதுமையான கதை பின்னல் உடைய நாவல் நுால். – முகிலை ராசபாண்டியன்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை