/ இசை / பி.ஏ.பெரியநாயகி திரையிசைப் பாடல்கள்

₹ 175

தமிழ் திரையுலகில் முதல் பின்னணி பாடகி என்ற பெருமை உடைய பி.ஏ.பெரியநாயகி பாடிய பாடல்களின் தொகுப்பு நுால். நடிகை, கர்நாடக இசைப்பாடகி போன்ற பன்முகங்கள் கொண்டவரின் வாழ்க்கை சுருக்கமும் இணைந்துள்ளது.இந்த புத்தகத்தில், 40 தமிழ் திரைப்படங்களில் பி.ஏ.பெரியநாயகி பாடிய, 133 பாடல்கள் முழுமையாக தரப்பட்டுள்ளன. தமிழ் திரையிசை ரசிகர்கள் விரும்பியபடி தரப்பட்டுள்ளது. பாடல்களின் பட்டியல், பாடகி பெரியநாயகி பங்களித்த படங்கள், எந்தெந்த இசையமைப்பாளர்களுடன் பணியாற்றி, எந்த பாடல்களை பாடினார், அதை எழுதிய கவிஞர் விபரம் என, எல்லாம் தெளிவாக தரப்பட்டுள்ளது. பாடகி பெரியநாயகி பற்றிய அரிய ஆவண நுால்.– ராம்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை