/ ஆன்மிகம் / பகவான் ஸ்ரீராமகிருஷ்ணரின் ஆன்மீக சாதனைகளும் உபதேசங்களும்
பகவான் ஸ்ரீராமகிருஷ்ணரின் ஆன்மீக சாதனைகளும் உபதேசங்களும்
பக்கம்: 253 கலாதர் என்னும் இயற்பெயர் கொண்ட ராமகிருஷ்ண பரமஹம்சரின், பிறப்பு முதல் முக்தி வரை உள்ள, அனைத்து நிகழ்வுகளையும் தொகுத்துத் தருகிறது இந்த நூல். காளிதேவியைக் கண்ணால் கண்ட ராமகிருஷ்ணர், தன் சீடர்களில் ஒருவரான விவேகானந்தருக்கு இறை ஆற்றலை வெளிப்படுத்திய விதம், இந்த நூலில் நன்கு விளக்கப்பட்டுள்ளது. இந்த உலக வாழ்க்கையானது, இறைநிலையை அடைவதற்கு வழங்கப்பட்ட சாதனம் என்பதனை, இந்த நூல் தெளிவாக விளக்குகிறது. கறுப்பு, வெள்ளைப் படங்களுடன் காட்சிப்படுத்தப்பட்டுள்ள இந்த வரலாற்று நூல், எளிய வாழ்க்கைக்கு வழிகாட்டும் நூல்.