/ பயண கட்டுரை / பாரதத்தின் வளர்ச்சிப் பயணம்
பாரதத்தின் வளர்ச்சிப் பயணம்
பிரதமர் நரேந்திர மோடியின் ஆட்சி சிறப்பை விவரிக்கும் நுால். ரயில் நிலையத்தில் டீ விற்ற செயலையும், வாழ்வில் நிகழ்ந்த செயல்களையும் குறிப்பிட்டுள்ளது. குஜராத்தில் மூன்று முறை முதல்வராக பதவி வகித்ததை விளக்குகிறது. அலுவலகத்திற்கு குறித்த நேரத்திற்கு முன்பே சென்று பணியாற்றி, மற்றவர்களுக்கு முன் உதாரணமாகத் திகழ்ந்த செயலை பதிவு செய்துள்ளது.தலைவர்கள் நல்லவர்களாகவும், அதே சமயம் வல்லவர்களாகவும் இருக்க வேண்டும்; அவர்களது துணிவு நேர்மையிலிருந்து பிறந்ததாக இருக்க வேண்டும் என்று சமுதாய நலன் சார்ந்த கருத்தை தெரிவிக்கிறது. அரசியலை அறிந்து கொள்வதற்கும், சிறந்த பேச்சாளர் ஆவதற்கும் உதவும்.– பேராசிரியர் இரா.நாராயணன்