/ வரலாறு / பாரதியும் ஜப்பானும்
பாரதியும் ஜப்பானும்
கிழக்காசிய நாடான ஜப்பான் குறித்து கவிஞர் பாரதியின் எண்ணங்களை தொகுத்து தரும் நுால். படைப்புகளில் உள்ள ஆதாரங்களை எடுத்துரைக்கிறது. ஜப்பான் குறித்த எழுத்தோவியத்தை, 100 ஆண்டு களுக்கு முன்பே படைத்துள்ளார் பாரதி. அவரது எழுத்துகள் ஜப்பான் அரசியல், இலக்கியம், பண்பாடு, தொழில் நுட்பம் என பன்முகமாக விரிந்துள்ளதை படம் பிடித்து காட்டுகிறது. பாரதியின் உலகளாவிய பார்வையை அறிய தருகிறது. தமிழ் – ஜப்பானிய மொழி உறவு குறித்தும் தகவல்கள் உள்ளன. பாரதியின் சிந்தனை உலக அளவில் ஓங்கியிருந்ததை எடுத்து கூறுகிறது. நோபல் பரிசு பெற்ற கவிஞர் தாகூரின் ஜப்பான் பற்றிய உரையின் மொழியாக்கமும் இடம் பெற்றுள்ளது. பாரதியின் பன்முக சிந்தனையை எடுத்துரைக்கும் நுால். – ஒளி