/ கட்டுரைகள் / பாட்ஷா
பாட்ஷா
நடிகர் ரஜினிகாந்த் நடித்த பாட்ஷா, அண்ணாமலை, வீரா ஆகிய படங்கள் உருவான விதத்தை இயக்குநர் பார்வையில் கூறும் நுால். அரோகரா என்ற தெய்வ மொழியை சுட்டிக்காட்டி, அண்ணாமலை படத் தலைப்புக்கு வந்த சோதனை விவரிக்கப்பட்டுள்ளது. நாயகியின் விடுதிக்கு சென்ற ரஜினி, கடவுளே என பேசிய வசனத்தால் ஏற்பட்ட சலசலப்பு குறித்த விபரங்கள் கூறப்பட்டுள்ளன. ஹைதராபாத் தாஜ்பஞ்சாராவில் படமாக்கப்பட்ட வீரா கதை குறித்து விளக்கப்பட்டுள்ளது. சன்டை காட்சியில் ‘டூப்’ போடாமல் ரஜினி நடித்ததையும், அதற்காக எடுத்த சிரமமும் எளிய நடையில் தரப்பட்டுள்ளது. ‘பஞ்ச்’ வசனங்கள் ஏற்படுத்திய தாக்கம், படப்பிடிப்பு தளங்களில் நடந்த சுவாரசியங்கள் பகிரப்பட்டுள்ளன. ரஜினி படங்கள் தயாரிப்பு பற்றி கூறும் நுால். – டி.எஸ்.ராயன்




