/ பயண கட்டுரை / போடோ நாடு

₹ 100

அசாம் மாநிலத்தில் இருந்து உருவாக்கப்பட்ட சின்னஞ்சிறு பிரதேசமான போடோ நாடு பற்றிய விபரங்களை தெரிவிக்கும் நுால். இலக்கியத்தில் மிகுந்த ஆர்வம் உள்ளோர் இருப்பதை அதிசய செய்தியாக தருகிறது. காணக் கிடைத்த காட்சிகள், இளைய தலைமுறையின் நேர்மையான போராட்டத் துடிப்பு, அழகழகான படங்களுடன் புத்தகம் முழுதும் விரவிக் கிடக்கின்றன. தேயிலை தோட்டங்கள், புழுதி அடைந்த மண்சாலைகள் அவற்றில் தியாக சின்னங்களை காட்டுகிறது. மாவீரர்கள் துயிலும் இடங்களில் தலைவர், தொண்டன் என வேறுபாடு பார்க்காமல் நட்டிருக்கும் நடுகல்கள், இலக்கியத்துக்கு கூட்டங்கள் நடத்துவது குறித்த செய்திகளை பரவசமுடன் எடுத்துரைக்கிறது. நம் நாட்டுக்கு உட்பட்ட சின்னஞ்சிறிய பகுதியின் சிறப்பை எடுத்துரைக்கும் நுால். – சீத்தலைச்சாத்தன்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை