/ கதைகள் / இரண்டாவது ஆகஸ்ட் 15
இரண்டாவது ஆகஸ்ட் 15
இலக்கியப் பீடம் பதிப்பகம், 3, ஜெயசங்கர் தெரு, மேற்கு மாம்பலம், சென்னை-33. (பக்கம்: 184) ஒரு கிராமத்தின் குடும்பத்தினரை உயர் அதிகாரிகளாக உயர்த்தி, ஒரு நேர்மையான ஏழைச் சமுதாயத் தொண்டரை எம்.எல்.ஏ.,வாக உயர்த்தி, கிராமங்களின் முன்னேற்றத்திற்காகத் தோன்றியுள்ள சுயஉதவிக் குழுக்களின் அவசியத்தையும், செயல்பாட்டையும் ஆங்காங்கே புகுத்தி, இந்தியாவின் இதயம் கிராமங்களில் இருக்கிறது என்னும் காந்தியின் வாசகங்களை நிலைநிறுத்தி இப்புதினத்தை உருவாக்கியுள்ளார் நூலாசிரியர். அரசியல்வாதிகள், அதிகாரிகள் இருவரும் சமுதாயப் பொறுப்புணர்வோடு செயல்பட்டால் கிராமங்களில் இரண்டாவது ஆகஸ்ட் 15 உதிக்கும் என்னும் மையக்கருத்தை வலியுறுத்தும் இந்நாவல் இலக்கியப் பீடப் பரிசை வென்றது என்பதும் குறிப்பிடத்தகுந்தது