/ வரலாறு / தமிழக இஸ்லாமிய வரலாற்று ஆவணங்கள்
தமிழக இஸ்லாமிய வரலாற்று ஆவணங்கள்
நேஷனல் பப்ளிஷர்ஸ், 2, வடக்கு உஸ்மான் சாலை, தி.நகர், சென்னை-17. (பக்கம்: 232.)உலகம் போற்றும் பல்வேறு சமயங்களிலும் அனைத்து மக்களாலும், மனதால் நெகிழச் செய்யும் சமயங்கள் இந்து, இஸ்லாம், கிறிஸ்துவம் எனப் போற்றப் பெறுவன. காரணம், மத நல்லிணக்கமே ஆகும். இதை, இத்தொகுப்பாசிரியர்கள் மனதில் கொண்டு, நூற்றெட்டு போற்றி போல, நூற்றியெட்டு தலைப்புகளில் அரிய, பெரிய உண்மைத் தகவல்களைத் திரட்டி, வெளியிட்டிருப்பது பாராட்டத்தக்கதாகும்."ஒற்றுமை என்னும் தேரினையே உருட்ட வேண்டும் அனைவருமே' என்பதற்கேற்ப உயர்நிலை, நடுநிலை, கீழ்நிலை முப்பிரிவிலும் இணைந்து தொண்டாற்றிய தூய நல் இதயங்களை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்திருக்கும்.இஸ்லாமியரின் தமிழ்க் கொடை பாடல் வடிவில் உள்ளது. படிக்கப் படிக்கத் தேன்தமிழை சுவைத்து மகிழலாம்.