/ சுய முன்னேற்றம் / ஆழ்மனம் அள்ளித்தரும் பணம்
ஆழ்மனம் அள்ளித்தரும் பணம்
வெளியீடு:மதர்ஸ், டிஜி மரியா பிளாட், பத்மாவதி நகர் மெயின் நோடு, மாடம்பாக்கம், சென்னை-600073. எண்ணற்ற வாசகர்களின் வேண்டுகோளுக்கிணங்க, பிரபல மன நல ஆலோசகர் சி.ஆர்.செலினின் பெரும் வெற்றி பெற்ற ஆடியோ சிடியான ஆழ்மனம் அள்ளித்தரும் பணம் இப்போது புத்தக வடிவில் வந்திருக்கிறது. உங்கள் ஆழ்மன சக்தியைப் பயன்படுத்தி நீங்கள் விரும்பிய துறையில் வெற்றிகளைக் குவிக்க இப்புத்தகம் வழிகாட்டும்.குடும்பத்தாலும் சமூகத்தாலும் ஏற்படுத்தப்பட்ட பணம் குறித்த மனத்தடைகளே அதை அடைய விடாமல் நம்மைத் தடுக்கின்றன. இத்தடைகள் எவை என்று உணர்வதே அவற்றை மீற நமக்கு வழிகாட்டிவிடும். பிறகு செல்வந்தராக உதவும் ஆழ்மனக் கட்டளைகளும், மனப்படங்களும் நம் இலக்கை அடைய உதவும் உத்திகளாக, மாபெரும் சக்திகளாக எப்படிப் பயன்படும் என்று இந்நூல் வழிகாட்டும்.