/ இலக்கியம் / மொழியும் இலக்கிய வளமையும்
மொழியும் இலக்கிய வளமையும்
சேகர் பதிப்பகம், 66, பெரியார் தெரு, எம்.ஜி.ஆர்., நகர், சென்னை-78. (பக்கம்: 96). * தமிழ் இலக்கியத்தில் இருந்து வழங்கப்பட்ட 13 கட்டுரைகளின் தொகுப்புத் தான் இந்த நூல். காதல் கொண்ட பெண்ணும் ஆணும் செய்யும் செயல்களை யாரும் புரிந்து கொள்ள முடியாது என்ற உண்மையைப் பெண்ணழகும் ஆணழகும் என்ற கட்டுரையில் முனைவர் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார். தமிழ் மொழியிலும் சமஸ்கிருதத்திலும் ஒன்றாகக் காணப்படும் சிந்தனைகளைத் தொகுத்துத் தமிழும் சமஸ்கிருதமும் என்று வழங்கியுள்ளார். தமிழ் மொழியின் இனிமைச் சுவையை அறிந்து கொள்ள விரும்புவோர்க்கு இந்த நூல் பெரிதும் உதவும்.