/ கட்டுரைகள் / பாரதியார் கண்ட பைந்தமிழ் வள்ளல்கள்
பாரதியார் கண்ட பைந்தமிழ் வள்ளல்கள்
வானதி பதிப்பகம், 23, தீனதயாளு தெரு, தி.நகர், சென்னை-17. (பக்கம்: 152.)எண் வரிசையில் ஒன்பது, தம் இடத்தை சீராய் தக்க வைத்துக் கொண்டதுபோல இந்நூலிலும் ஒன்பது கட்டுரைகள், படிப்பவர்கள் மனதில் மகிழ்ச்சியை நிலைநிறுத்தும்.இந்நூலில் பாரதி கம்பனையும், வள்ளலாரையும் அணுகி, நுணுகிப் பார்த்த தகவல்கள் யாவும் திரட்டித் தரப்பட்டுள்ளன. அருட்பா அமுதம், சன்மார்க்க நெறி கண்ட வெள்ளாடைத் துறவி புதுமை நயந்த புரட்சிக்காரர் என்பதற்கு பத்து அகச்சான்றுகள் பட்டியலிடுகிறார். இந்நூல் இலக்கியப் பேச்சாளருக்கு பெரிதும் பயன்படும்.