/ ஆன்மிகம் / சின்னாளப்பட்டி சதுர்முக முருகன் ஸ்ரீ சுப்ரமணிய சுவாமி திருக்கோவில் தல வரலாறும், தலைமுறை வரலாறும்

₹ 100

மாஸ் பப்ளிகேஷன்ஸ், சென்னை-42. (பக்கம்: 237. விலை: ரூ.100).பிரணவத்திற்குப் பொருள் தெரியாத பிரம்மனைத் தலையில் குட்டிச் சிறையில் அடைத்து படைப்புத் தொழிலை தானே ஏற்ற முருகப் பெருமானின் வரலாற்றை அடிப்படையாக் கொண்டது இந்த தல புராண நூல். சின்னாளப்பட்டியில் கோவில் கொண்டுள்ள ஸ்ரீ சுப்ரமணியருக்கு ஆறு சிரங்கள் கிடையாது. பிரம்மனைப் போல் நான்கு தலைகளே! இந்தத் தலத்தின் வரலாற்றையும், இங்கு கோவில் எழுப்பிய பெருமக்களின் வரலாற்றையும் ஒரு சேர பல ஆன்மிகத் தகவல்களுடன் அற்புதமாக எழுதியிருக்கிறார் ஆசிரியர். ஆன்மிக அன்பர்கள் அவசியம் படிக்க வேண்டிய நூல்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை