/ இலக்கியம் / வீட்டுப் பராமரிப்பு, அழகு மற்றும் ஆரோக்கியக் குறிப்புகள்
வீட்டுப் பராமரிப்பு, அழகு மற்றும் ஆரோக்கியக் குறிப்புகள்
சுரா புக்ஸ் (பி) லிட்., 1620-`ஜே' பிளாக், 16வது பிரதான சாலை, அண்ணா நகர், சென்னை-40, (பக்கம்: 200.) `ஒருவர் வாழ்நாள் முழுவதுமாகத் தமது மனையையும், மனைவியையும் அழகு செய்து மகிழ்ந்திருக்கலாம்' எனத் தெலுங்கில் ஒரு முதுமொழி உண்டு. இதை நன்கு உணர்ந்த இந்நூலாசிரியர்கள், உடல் அழகு, ஆரோக்கியம், மருத்துவச் சுகாதாரக் குறிப்புகளுடன், சமையல் மற்றும் நகைகள் உள்ளிட்ட அனைத்து வீட்டுப் பொருட்களை எல்லாம் முறையாகப் பேணிப் பாதுகாத்து மெருகேற்ற உதவிடும் எண்ணற்ற வழிமுறைகளைத் தொகுத்து வழங்கியுள்ளனர்.அனைத்து இல்லங்களிலும் இடம் பெற வேண்டிய பயனுள்ள நூல்.