/ ஆன்மிகம் / விஷ்ணு சஹஸ்ரநாமம் லலிதா சஹஸ்ரநாமம்
விஷ்ணு சஹஸ்ரநாமம் லலிதா சஹஸ்ரநாமம்
தொகுப்பு : வாசுதேவ்பக்கம் : 120கிழக்குப் பதிப்பகம், 33/15 எல்டாம்ஸ் ரோடு, ஆழ்வார்பேட்டை, சென்னை-600 018; தொலைபேசி: 044-4200 9601, 4200 9603, 4200 9604விஷ்ணு சஹஸ்ரநாமம் மகாபாரதத்தில் உபதேசிக்கப்பட்ட தனிச் சிறப்பைப் பெறு கிறது. லலிதா சஹஸ்ரநாமம், பிரமாண்ட புராணத்தில் அருளப்பட்ட பராசக்தியின் பேராற்றலை விவரிக்கிறது. தமிழ்நாட்டுக்கும் லலிதா சஹஸ்ரநாமத்துக்கும் ஒரு தொடர்புண்டு. "பாஷாரூபா' என்று தேவி இதில் வர்ணிக்கப்படுகிறாள். மொழி (பாஷை) வடிவில் இருக்கும் அன்னை. தமிழகத்தில் மட்டுமே "தமிழ்த்தாய் வாழ்த்து' என்று மொழியைப் போற்றிப் புகழும் வழக்கம் உண்டு. வெகு சிறப்பாகப் பாராயணம் செய்யப்படும் இரண்டு சஹஸ்ரநாமங்களைத் தொகுத்து எல் லோரும் படிக்கும்வண்ணம் பெரிய எழுத்துக்களில் இந்நூல் வெளிவந்திருப்பது இன்னொரு சிறப்பு.