/ கல்வி / ஆங்கில இலக்கணத்தை எளிமையாகச் சொல்லித்தரவா?

₹ 300

ஆங்கில மொழியை கற்றுக்கொள்ள உதவும் நுால். துாங்கி எழுவது முதல் படுக்கைக்கு செல்லும் வரை, சாதாரணமாக பேசுவதை ஆங்கிலத்தில் விவரிக்கிறது.எந்த வார்த்தைக்கு எந்த எழுத்து பயன்படுத்த வேண்டும். ஒரு எழுத்து மாறினால் கூட, அர்த்தம் வேறாகி விடும் என இலக்கணத்தை கற்பிக்கிறது. பல பொருட்களின் ஆங்கிலச் சொல், நில பரப்புகள், பறவைகள், இயற்கை வளங்களின் பெயர்கள் பட்டியலிடப்பட்டு உள்ளன. கல்வி, அரசு துறைகள், பதவிகளின் சுருக்கமான பெயர்களுக்கு விரிவாக்கம் தருகிறது.தொடர் பயிற்சி எடுத்தால், முழுமையாக பேச, எழுத முடியும் என உணர்த்துகிறது. குழந்தைகள், ஆங்கிலம் கற்க விரும்புவோருக்கு உதவும் நுால்.– -டி.எஸ்.ராயன்


சமீபத்திய செய்தி