/ வாழ்க்கை வரலாறு / செக்கு வாணிய செட்டியார்கள் அன்றும் இன்றும்

₹ 100

எண்ணெய் பிழியும் தொழில்நுட்பத்தை தமிழகத்தில் பயன்படுத்தும் மக்களின் வாழ்நிலையை உரைக்கும் நுால். வரலாற்று ரீதியாக தொழிலுடன் உள்ள தொடர்பை விவரிக்கிறது.செக்கு தொழிலில் பிரபலமாக விளங்கிய குடும்ப அனுபவமாக துவங்கி, ஆய்வுப்பூர்வமாக தகவல்களை முன்வைக்கிறது. பழங்கால கல்வெட்டுகளில் செக்குக்கு அளிக்கப்பட்டிருந்த முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது.செக்கின் இயக்கம் பற்றி தெளிவாக எடுத்துரைக்கப்பட்டுள்ளது. இந்த தொழிலுடன் மாடுகளுக்கு உள்ள தொடர்பும் விளக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு தகவலும் அனுபவ ரீதியாக தொகுத்து தரப்பட்டுள்ளது. தமிழகத்தில் முதன்மையாக விளங்கிய முக்கிய தொழில் குறித்த விபரமுடைய நுால்.– ஒளி


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை