/ சமையல் / கிச்சன் கிளினிக்
கிச்சன் கிளினிக்
விகடன் பிரசுரம், 757, அண்ணா சாலை, சென்னை-2 (பக்கம்: 112) உணவு பழக்கமே, ஒருவரின் ஆரோக்கியமான வாழ்வுக்கு வழி வகுக்கிறது. அந்த வகையில், உடலுக்கு தீங்கு ஏற்படாத உணவு முறைகள் பற்றி, இந்த நூல் விளக்குகிறது. உடல் பருமன், வயிற்றுப் புண், சிறுநீரக கல் போன்ற நோய்களால், ஏராளமானோர் பாதிக்கப்படுகின்றனர். இந்த நோய்கள் வராமல் தடுப்பதற்கு எந்த வகையான உணவுகளை உட்கொள்ளலாம் என்பது பற்றியும் இந்நூலில் அழகான குறிப்புகள் தெரிவிக்கப்பட்டுள்ளன. அது மட்டுமல்லாமல், பிரபல மருத்துவர்களின் ஆலோசனைகளும் இந்த நூலில் இடம் பெற்றுள்ளன. எந்த நோய்க்கு, எந்த காய்கறிகள் அல்லது தானியங்களை உணவாக பயன்படுத்தலாம் என்ற தகவலும் உள்ளன.