/ மாணவருக்காக / சீன கணித மேதைகள்
சீன கணித மேதைகள்
சீன கணித வளர்ச்சியையும், அங்குள்ள அறிஞர்களையும் பற்றிய தகவல் செறிந்த நுால். அறிவியல் ஆர்வலர்கள், மாணவர்கள், கணித ஆர்வலர்களுக்கு பயன்தரும்.சீனாவின் கணித முன்னோடிகள் பற்றி விரிவான தகவல்கள் தரப்பட்டுள்ளது. கணித வளர்ச்சியில் பங்களிப்பு, அறிஞர்களின் வாழ்க்கை வரலாறு மற்றும் கண்டுபிடிப்புகள் விவரிக்கப்பட்டுள்ளன. கணிதப் புதிர்கள் இடம் பெற்றுள்ளன. பள்ளி, கல்லுாரி மாணவர்கள் தங்கள் கணித அறிவை மேம்படுத்த படிக்கலாம். கணிதம் எவ்வாறு வளர்ச்சி பெற்றது என்பதை புரிந்துகொள்ள விரும்புவோருக்கு பயன்படும். கணிதம் மற்றும் அதை உருவாக்கிய மேதைகள் பற்றி வழங்குகிறது. கணித அறிவை விரிவுபடுத்த உதவும் நுால்.- – இளங்கோவன்