/ கதைகள் / சின்னம்மா

₹ 200

செல்வந்தர் மரணத்தால் குடும்பத்தில் ஏற்படும் சிக்கல்களை விறுவிறுப்பான நடையில் சொல்லும் நாவல் நுால். பாசமும், நேர்மையும் நிறைந்த பெண்ணை சுற்றியபடி கதை நகர்கிறது.இரண்டு மகன்களுக்கு தந்தையான செல்வந்தர், மனைவி மரணத்தால் மறுமணம் செய்கிறார். மகன்கள் வெளியூரில் படிக்கும் போதே மரணம் அடைகிறார். இதை அடுத்து, குடும்பத்தில் ஏற்படும் சிக்கல், குழப்பம், சொத்தை அபகரிக்க நடக்கும் சதி என, பரபரப்பாக பின்னப்பட்டுள்ளது.அண்ணன் – தம்பிக்குள் மோதல் ஏற்படுத்தும் சூழ்ச்சி என வேகம் பிடிக்கிறது. சம்பவங்கள் காட்சியாக விரிகின்றன. கலைநயமுள்ள விவரிப்புகள், படிக்கும் ஆர்வத்தை துாண்டுகின்றன. குமுதம் இதழில் அதன் ஆசிரியராக இருந்த எஸ்.ஏ.பி., தொடராக எழுதிய சுவாரசியம் மிக்க நாவல் நுால்.– மதி


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை