/ கதைகள் / சினிமா நடிகர்களின் முதல்வர் கனவு!
சினிமா நடிகர்களின் முதல்வர் கனவு!
நாட்டு நடப்புகளை அலசும் சிறுகதைகளின் தொகுப்பு நுால். சினிமா மோகம் இளைஞர்களிடம் ஏற்படுத்தும் தாக்கம், அதனால் ஏற்படும் விளைவுகளை விவரிக்கிறது. இயற்கை வளங்களை பாதுகாக்க முயற்சிக்காத இளைஞர்கள், நடிகரின் படத்திற்கு எடுக்கும் அக்கறையை கவலையுடன் பகிர்கிறது. உணர்ச்சியை துாண்டி, பணத்தால் விலைபேசி அதிகாரத்தை கைப்பற்ற கனவு காணும் பிரபலங்களை எச்சரிக்கிறது. பதவி இழந்த தலைவர்கள் அதிகாரத்தை பிடிக்க எடுக்கும் தந்திரங்களை பேசுகிறது. அலைபேசி ஏற்படுத்தும் தாக்கத்தை, பெற்றோரை எச்சரிக்கும் வகையில் அலசுகிறது. பேருந்தில் பெண்கள் படும் இன்னல்களை கூறுகிறது. தொலைநோக்குடன் சிந்திக்க வலியுறுத்தும் நுால். – டி.எஸ்.ராயன்




