/ இசை, இயல், நாடகம் / செவ்வியலும் நாட்டுப்புறவியலும்
செவ்வியலும் நாட்டுப்புறவியலும்
தொன்மையான நாட்டுப்புறவியல் கூறுகளையும், செவ்வியல் விழுமியங்களையும் ஆராய்ந்துள்ள நுால். பண்டைக்காலத்தில் நாட்டுப்புறவியல் வழக்குகள் மக்களிடையே பெருமளவில் பரவியிருந்ததை அறிய தருகிறது. பல்வரிக்கூத்து, பாவைக்கூத்து, தெருக்கூத்து, நிகழ்த்துகலை வளர்ச்சியடைந்ததை முன்வைக்கிறது. தமிழர் பண்பாட்டின் அடையாளங்களாக திகழ்வதை எடுத்துக் காட்டுகிறது. நாட்டுப்புறவியல் கோட்பாடுகள் குறித்த ஆய்வாளர்களின் கருத்துகளை தொகுத்து தருகிறது. தொல்காப்பியர் திணை கோட்பாட்டை சார்ந்த முதல், கரு, உரி பொருள்களை படைப்பிலக்கிய நோக்கில் ஆராய்ச்சி செய்ய வேண்டியதை வலியுறுத்துகிறது. வாய்மொழி மரபில் பனுவலாக்கம், வகைமைகள் பற்றிய கருத்தியல்களை உலகளவில் நோக்க வேண்டியதை சுட்டும் நுால். – கவிஞர் மெய்ஞானி பிரபாகரபாபு




