/ சிறுவர்கள் பகுதி / வண்ண பலூன்
வண்ண பலூன்
சிறுவர், சிறுமியர் மனங்கவரும் வண்ணம் உள்ள பாடல்களின் தொகுப்பு நுால். நல்ல எண்ணங்களுக்கு ஊற்றுக் கண்ணாக உள்ள காரணங்களை முறைப்படுத்தி அறிய தருகிறது. தொகுப்பில், ‘ஆசானை வணங்குவோம்’ என்ற தலைப்பில் துவங்கி, ‘நற்செயல் ஒன்றே நமது பணி’ வரை, 55 பாடல்கள் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு பாடலும் அறக்கருத்தை உள்ளத்தில் பதிய வைக்கும் வகையில் உள்ளன. ‘வாய்மை வழி செல்’ என்ற தலைப்பில், ‘தேவையின்றி அதிகமாக பேசக்கூடாது – பேசும் போது வார்த்தை எல்லை மீறக்கூடாது’ என எச்சரிக்கும் விதமாக உள்ளது. சிறுவர், சிறுமியர் எளிதாக மனப்பாடம் செய்யவும், பாடி மகிழவும் ஏற்றது. நற் சிந்தனையை மனதில் பதிக்கும் வகையில் எளிய நடையில் உருவாக்கப்பட்டு உள்ளது. சந்தம் மிகுந்த பாடல்களின் தொகுப்பு நுால். – ஒளி




