/ கம்யூனிசம் / காலம்தோறும் கம்யூனிஸ்டுகள் (பாகம் – 1)

₹ 1000

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நுாற்றாண்டு வெளியீடாக மலர்ந்துள்ள நுால். கம்யூனிஸ்ட் இயக்கம் வளர பாடுபட்ட, 50 தலைவர்களின் தியாக வாழ்வு சுருக்கமாக தரப்பட்டுள்ளது. சிங்காரவேலர், ப.ஜீவானந்தம், மணலி கந்தசாமி, கே.டி.கே.தங்கமணி, என்.சங்கரய்யா, ஆர்.நல்லகண்ணு மற்றும் மணலுார் மணியம்மை, பார்வதி கிருஷ்ணன் உள்ளிட்டோர் விபரங்கள் உள்ளன. தலைவர்கள் மட்டுமின்றி அவர்களின் குடும்பமும் இயக்கத்தில் தீவிரமாக செயல்பட்ட செய்திகள் தரப்பட்டுள்ளன. சுதந்திர போராட்டத்திலும், மக்கள் பிரச்னையை தீர்ப்பதிலும் காட்டிய ஈடுபாட்டை தெளிவாக படம்பிடிக்கிறது. நிகழ்வுகள் வழியாக தகவல்களை தந்து தியாகத்தின் சிறப்பை உணர்த்தும் நுால். – மதி


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை