Advertisement

காலம்தோறும் கம்யூனிஸ்டுகள் (பாகம் – 2)


காலம்தோறும் கம்யூனிஸ்டுகள் (பாகம் – 2)

₹ 1000

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

இந்தியாவில் பொதுவுடைமை இயக்கம் வளர பாடுபட்ட தலைவர்களின் நினைவை போற்றும் நுால். கம்யூனிஸ்ட் கட்சி நுாற்றாண்டையொட்டி மலர்ந்துள்ளது. தமிழகம் உட்பட பல பகுதிகளில் இருந்து கம்யூனிஸ்ட் இயக்கத்தால் ஈர்க்கப்பட்டு பணிபுரிந்த 50 தலைவர்களின் தியாக வாழ்வு தரப்பட்டுள்ளது. பெரிய ஆலைகள் முதற்கொண்டு, சாதாரண பீடி உற்பத்தி செய்த தொழிலாளர் சங்கங்களை கட்டமைத்து சேவையாற்றியது குறித்து எடுத்துரைக்கிறது. துாக்கு கயிறை துரும்பென உதறி மக்கள் பணியில் தீவிரம் காட்டியது, உணர்வு பெருக்குடன் கூறப் பட்டுள்ளது. பிரச்னைகளை தீர்க்கும் போராட்டங்கள் வழியாக மக்கள் மனதில் இடம் பிடித்த தியாக வாழ்வின் சிறப்புகளை எடுத்து கூறும் நுால். – மதி

ipaper

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்


புதிய வெளியீடுகள்