/ கவிதைகள் / ஒப்பீட்டு நோக்கில் தமிழ் தெலுங்கு தலித் கவிதைகள்
ஒப்பீட்டு நோக்கில் தமிழ் தெலுங்கு தலித் கவிதைகள்
தலித் சிந்தனை அடிப்படையில் தமிழ், தெலுங்கு கவிதைகளை ஒப்பீடாக விளக்கும் நுால். தலித் இலக்கியத்தின் தோற்றம், வளர்ச்சி, தற்கால நிலையை முன்வைக்கிறது. கவிதைகளில் தெறிக்கும் சொல்லெழுச்சி, சீற்றம், அழகியல் கூறு, கருத்தியலை விரிவாக ஆராய்கிறது. தமிழ், தெலுங்கு மொழி தலித் கவிஞர்கள், எழுத்தாளர்களை அறிமுகப்படுத்துகிறது. தலித் கவிஞர்கள் படம்பிடித்து காட்டும் சூழல்களை விளக்கிக் கூறுகிறது. மேம்பாடுகளை வலியுறுத்தும் கவிஞர்களை அறிய வைக்கிறது. தீண்டாமை, ஏற்றத்தாழ்வு, விடுதலையுணர்வு பற்றி ஆராய்கிறது. ஏற்றத்தாழ்வு பிரச்னைகளை அறிய வைக்கும் நுால். – கவிஞர் மெய்ஞானி பிரபாகரபாபு




