/ கட்டுரைகள் / DISCUSSION
DISCUSSION
இந்த நூலாசிரியர் பட்டயக்கணக்காளர். ஆங்கிலத்தில் நல்ல புலமை கொண்டவர். பொருளாதார திண்மை கொண்ட கட்டுரைகள் பல எழுதியவர். இந்த நூலில் 32 தலைப்புகளில், கருத்து மிக்க விவாதம் பற்றி எழுதிய பாங்கு அவரது திறமையைக் காட்டுகிறது.பள்ளி செல்லும் மாணவ,மாணவியர் முதல் ஆன்மிகம் பேசுவோர் வரை எப்படி பயனுள்ள விவாதங்களை நடத்தி மகிழலாம் என்று விளக்கம் தருவது சிறப்பாகும். ‘விவாதம் என்பது கருத்து மோதல், கசப்பானது என்பதை விட, வாத்து தண்ணீரில் இயல்பாக பயணிப்பது போல நளினமானது’ என்ற இவர் கருத்து சிந்திக்க வைப்பது. நூலைப் படித்து பயனடையுங்கள்.