/ வாழ்க்கை வரலாறு / டாக்டர் முத்துலட்சுமி
டாக்டர் முத்துலட்சுமி
இந்தியாவின் முதல் பெண் மருத்துவர் என்ற பெருமைக்குரிய டாக்டர் முத்துலட்சுமி வாழ்க்கை வரலாற்றை விவரிக்கும் நுால். எளிய குடும்பத்தில் பிறந்து, சமூக அக்கறையுடன் பாலின சமத்துவத்தை நிலைநிறுத்தி போராளியாக விளங்கியதை விவரிக்கிறது. குழந்தை பருவத்தில் உடல் பிரச்னைகள் இருந்த போதும், இன்னல்களை கடந்து கல்வியால் சாதனை புரிந்ததை எடுத்துரைக்கிறது. சட்டசபை துணைத் தலைவராக ஆற்றிய உரையில் பள்ளி மாணவியருக்கு மருத்துவப் பரிசோதனை செய்யவும், சிறப்பு குழந்தைகளுக்கு மருத்துவமனை நிறுவவும் கோரியதை நினைவுபடுத்துகிறது. சேவா சதன், மகளிர் சமாஜம், மகப்பேறு மற்றும் குழந்தைகள் நல சங்கத்தில் செயல்பட்டது பற்றியும் உள்ளது. மகத்தான சாதனையை விவரிக்கும் நுால். – புலவர் சு.மதியழகன்




