/ வாழ்க்கை வரலாறு / எடப்பாடி கே.பழனிசாமி வாழ்வும் வரலாறும்
எடப்பாடி கே.பழனிசாமி வாழ்வும் வரலாறும்
தமிழக முன்னாள் முதல்வர் பழனிசாமி வாழ்க்கை வரலாற்று நுால். கட்சி, ஆட்சியில் ஆற்றிய பணிகளை விவரிக்கிறது. சென்னை பச்சையப்பன் கல்லுாரி வரலாற்று துறை நடத்திய கருத்தரங்கில் வாசிக்கப்பட்ட உரைகள் புத்தக வடிவம் பெற்றுள்ளது. ஜெயலலிதா மறைவுக்கு பின், அ.தி.மு.க.,வை துாக்கி நிறுத்தியதாக புகழ் பாடுகிறது. பச்சையப்பன் கல்லுாரியில் பயின்றோரில் தமிழக முதல்வரான நான்கு பேர் பற்றிய செய்திகள் உள்ளன. சாதாரண மனிதனும் முதல்வராக முடியும் என்ற கருத்துக்கு வலு சேர்க்கிறது. பெண்கள் முன்னேற்றத்திற்கான சலுகைகளை குறிப்பிடுகிறது. தேர்தல் தொடர்பான செய்திகளும் உள்ளன. அரசியல்வாதிகளுக்கு பயன்படும் நுால். – புலவர் ரா.நாராயணன்




