/ தமிழ்மொழி / எளிய தமிழ் இலக்கணம்
எளிய தமிழ் இலக்கணம்
தமிழ் இலக்கண நுணுக்கங்களைக் கற்றுக் கொள்வதற்கு உதவியாக தயாரிக்கப்பட்டுள்ள நுால். மாணவர்களுக்கும், புதிதாக கற்பவர்களுக்கும் வழிகாட்டி ஆதாரமாக விளங்கும் வகையில் உள்ளது.இலக்கணத்தில் எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி மற்றும் பிழை திருத்தம் என்ற தலைப்புகளில் கருத்துக்கள் ஒழுங்காக அமைக்கப்பட்டுள்ளன. இந்தப் பிரிவுகளில் தமிழ் இலக்கணத்தில் முக்கிய அம்சங்களை எளிய நடையில் விளக்குகிறது.ஆறு முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஏற்ற வகையில் உள்ளது. சிக்கலான இலக்கணக் கருத்துக்களை தெளிவாக அணுகும் வகையில் விவரிப்பு உள்ளது. மொழியின் அடிப்படை அறிவை வழங்கும் பங்கு வகிக்கிறது. இலக்கண அறிவை வளர்க்கும் நுால்.– -வி.விஷ்வா