/ ஆன்மிகம் / எளிய வடிவில் சிலப்பதிகாரமும் சீவக சிந்தாமணியும்
எளிய வடிவில் சிலப்பதிகாரமும் சீவக சிந்தாமணியும்
சிலப்பதிகாரம், சீவக சிந்தாமணியை உரைநடையில் தந்துள்ள நுால். பாடல் வரிகளை மேற்கோளாக காட்டி எளிய நடையில் தருகிறது. கோவலன், கண்ணகி இல்லற வாழ்வு, மாதவி வருகையால் சிதைவுற்றதை சொல்கிறது. கோவலன் கொலைக்கு பின், ‘மன்பதை காக்கும் தென்புலக்காவல் என் முதற் பிழைத்தது கெடுக என் ஆயுள்’ என, மன்னன் பாண்டியன் உயிர்விட்டது வரை நிரல்படுத்துகிறது. அறம், பொருள், இன்பம், வீட்டை வலியுறுத்தும் சீவக சிந்தாமணி, 13 பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. எட்டு பெண்களை மணந்து இல்லறம் நடத்தியது, பின், துறவறம் மேற்கொண்டது வரை நயத்துடன் விவரிக்கப்பட்டுள்ளது. காப்பியங்களை எளிமையாக தந்துள்ள நுால். – புலவர் சு.மதியழகன்




