/ கட்டுரைகள் / எங்கே போகிறோம் நாம்?
எங்கே போகிறோம் நாம்?
விகடன் பிரசுரம், ஓவியங்கள் ஸ்யாம், 757, அண்ணா சாலை, சென்னை-2. (பக்கம்: 320 டெமி) வார இதழ் ஒன்றில் வந்த கட்டுரைத் தொடர் அழகிய நூலாக, உயர்ந்த தாளில், சிறந்த அச்சில், வண்ணப்படங்களுடன் வெளிவந்துள்ளது. நூலின் அமைப்பே நூலைப் படிக்கத் தூண்டுகிறது.அரசியல், அரசு, கட்சி, கொள்கை, கட்சித்தாவல், தடைச்சட்டம், சந்தர்ப்பவாதம், தேர்தல், வாக்குறுதி, இலவசம் என்று, நம்முடன் நம் வாழ்வில் தொடர்பு கொண்ட எல்லா தலைப்பிலும் அருமையான கட்டுரைகள் வடித்துள்ளார். அழுக்கு வார்த்தைகளால் யாரையும் அசிங்கப்படுத்தாத சமூக நலன் சார்ந்த படைப்பு என்று ஆசிரியர் கூறியிருப்பது நிஜம் தான்.