/ புத்தக மதிப்புரை / எரிக் ஹாப்ஸ்பாம் மார்க்சியமும் வரலாறும்
எரிக் ஹாப்ஸ்பாம் மார்க்சியமும் வரலாறும்
வரலாற்று ஆய்வாளர் எரிக் ஹாப்ஸ்பாமின் வாழ்க்கையையும், பணிகளையும் அறிமுகப்படுத்தும் வகையில் அமைந்துள்ள நுால். இந்த புத்தகம் நான்கு பகுதிகளாக உள்ளன. முதல் பகுதியில் வரலாற்றின் அமைப்பு, அதை எழுதுவோர் குறித்த அறிமுகத்தை தருகிறது. அடுத்து, காலங்களின் கதை என்ற தலைப்பில் புரட்சி, முதலீடு, பேரரசு, தீவிரம் என பல்வேறு வரலாற்று செய்திகள் தரப்பட்டுள்ளன. மூன்றாம் பகுதியில் பொதுவுடமை தத்துவமாகிய மார்க்சியம் சார்ந்த வரலாற்று பார்வையை முன் வைக்கிறது. கருத்துக்கள் தெளிவாக தொகுத்து தரப்பட்டுள்ளன. இறுதியில் வரலாறு மற்றும் அரசியல் சார்ந்த பார்வையை முன்வைக்கிறது. வரலாற்றை அணுகும் முறையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை எடுத்தியம்பும் நுால். – மதி




