/ சிறுவர்கள் பகுதி / எட்டுக்கால் பூச்சிக்கு ஏழு கால்கள்

₹ 150

சிறுவர் – சிறுமியரை குதுாகலிக்க வைக்கும் சிறுகதைகளின் தொகுப்பு நுால். சிக்கல் ஏற்படும் நேரங்களில் திகைத்து நிற்காமல், அறிவை பயன்படுத்தி அடுத்த கட்டத்துக்கு முன்னேற வேண்டும் என்பதை எளிய நடையில் எடுத்துரைக்கின்றன கதைகள். கற்பனையை துாண்டும் பொருத்தமான ஓவியங்களுடன், விலங்குகளை மையமாக கொண்ட கதாபாத்திரங்களே அதிகம் உள்ளன. கதைகளில் தவழும் கற்பனைகள், சிந்தனையை தீட்டி நம்பிக்கை ஊட்டும் வகையில் அமைந்துள்ளன. ஒவ்வொரு கதையிலும் அறக்கருத்துகள் மென்மையாக புரியும் வண்ணம் புகட்டப்பட்டுள்ளன. கதாபாத்திரங்களும், கதைக்களமும் சிறுவர் சிந்தனையை துாண்டும் வகையில் உள்ளன. சிறுவர்களின் அறிவுத்திறனை மேம்படுத்தும் சிறுகதைகளின் தொகுப்பு நுால். – மதி


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை